18 June 2011

கேட்பதெல்லாம்...

இது காண்பதெல்லாம்... பதிவின் தொடர்ச்சி.

பொருட்கள் உதாரணமாக கம்பியோ, தகடோ, சவ்வோ அதிரும் போது அவை காற்றிலுள்ள மூலக்கூறுகளையும் தாக்கி அதிரவைத்து பரவுகின்றன. இந்த அதிர்வு-அலைகளை காது மின்-அலைகளாக மாற்றி மூளைக்கு அனுப்புகின்றது. மூளை அதிலுள்ள பாங்கை, ஏற்கனவே கற்று உருவாக்கிய மாதிரிகளை கொண்டு உணர்ந்து கொள்கின்றது (மேலும்: அறிவின் மூலம்). அதை நாம் சத்தமாக உணர்கின்றோம். சத்தம் என்பது வெளி-உலகில் எங்கும் இல்லை. அது மூளையில் மட்டுமே உருவாக்கப்படுகின்றது. ஆக மூளையால் எந்தவித வெளி-உலக அதிர்வு-அலை தூண்டுதலும் இன்றி சத்ததை உருவாக்க முடியும். அப்படியே, மூளையில் ஏற்படும் சில கோளாறுகள், உதாரணமாக சிகோஃபெரனியா (Schizophrenia) எனப்படும் மனச்சிதைவு நோய், பலவிதமான சத்த-பிரம்மையை உருவாக்குகின்றன (மனவியல் பற்றிய போதுமான அறிவு இல்லாத காலத்தில், அப்படிப்பட்ட சிலர் தூதுவர்களாக ஆனார்கள்).

மூளை உருவாக்கிய மாதிரிகளே, நாம் உணரும் உலகம். ஆக, நாம் கேட்பது/பார்ப்பது/உணர்வது அனைத்துமே ஒருவகையில் மாயை போன்றது தான். இந்த மாயையை நாம் பொதுவாக உணருவதில்லை என்றாலும், கீழே உள்ள உதாரணங்கள், வெளியுலக-நிதர்சனத்திற்கும் மூளை-உருவாக்கிய-மாதிரிகளுக்கும் உள்ள வேறுபாட்டை சற்றே வெளிப்படையாக அறிவிக்கின்றன.


(சுருதி ஏறிகொண்டே போவதுபோல் தோன்றினாலும், ஒரே சத்தம் தான் திரும்ப திரும்ப கேட்கின்றது)




(இது மெக்கார்க் விளைவு எனப்படுகின்றது (McGurk effect). இங்கு சத்ததின் தூண்டுதலை, பார்வையின் தூண்டுதல் குழப்பிவிடுவதால், மூளை வேறுமாதிரியான சத்தத்தை உருவாக்குகின்றது. இதை ஒரு முறை கேட்ட பிறகு, மீண்டும் ஒருமுறை கண்களை மூடிக் கொண்டு கேட்கவும்)




(மெக்கார்க் விளைவுக்கு மற்றொரு உதாரணம். இதில் ஒவ்வொரு உதாரணத்திற்கும் காட்சி-வார்த்தை என்ன, சத்த-வார்த்தை என்ன எழுதப்பட்டுள்ளதை கவனிக்கவும். உண்மையான சத்தத்தை கண்ணை மூடிக் கொண்டு கேட்டு உறுதிபடுத்திக் கொள்ளலாம்)



ஒரு காட்சி, இரண்டு கண்களில் சற்றே மாறுபட்ட கோணத்தில் விழுகின்றது. இந்த வேறுபாட்டை கொண்டு மூளை முப்பரிமாண தோற்றத்தை உருவாக்குகின்றது (மேலும்: வண்ண ஆன்மீக உலகம்). இது போலவே, ஒரு அதிர்வு-அலை இரண்டு காதுகளுக்கும் வெவ்வேறு சமயத்தில் அடைவதை கணித்து சத்ததின் திசையை, இடத்தை மூளை கணிக்கின்றது. இதை உருவகப்படுத்தி, முப்பரிணமான திரைப்படம் பார்ப்பது போல் (3D கண்ணாடி வேண்டும்), முப்பரிணிமான ஓசையை (காதொலிப்பான் வேண்டும்) உருவாக்கலாம்.


(முப்பரிமாண மெய்நிகர் முடிவெட்டும் கடை. இதை காதொலிப்பான் (Headphone) கொண்டு கேட்க வேண்டும். நன்றாக இளைப்பாற உட்கார்ந்து கொண்டு, கண்களை மூடிக்கொண்டு கேட்கவும்)

3 comments:

Kamaraj said...

நண்பர் சார்வாகன் கேட்டு கொண்டதற்காக இட்ட பதிவு. அவருக்கு நன்றி!

saarvaakan said...

மிக்க நன்றி!

Kamaraj said...

http://www.science20.com/curious_cub/blog/phantom_words-80131

http://philomel.com/musical_illusions/
http://philomel.com/phantom_words/