29 April 2011

பழமை பேசியே

இயற்கை இயல், காதல் கணிதம்,
என எந்த பாகுபாடுமின்றி அனைத்திற்கும்,
பாட்டெழுதியே பாடாவதி ஆனோமோ?
உண்மையும் பொய்யும் கற்பனையும் மிகையும்
ஒன்றே கலந்து உருப்படாமல் போனோமோ?

மீன் கொடுப்பதை விட, மீன்
பிடிக்க கற்று கொடுப்பது முக்கியம்.
சமன்பாட்டை விட அது வந்த முறை முக்கியம்.
விடையை விட அதன் வழிமுறை முக்கியம்.
அறிதலை விட அறிந்த முறை முக்கியம் - இதை
நம் முன்னோர் அடுத்த தலைமுறைக்கு
கொடுக்க தவற, தவறியே போனோமோ?

முன்னோர் கொடுத்ததில் அறியாமையும் பாதி,
அதை அறியாமல் முடங்கி போனோமோ?
அதன் விளைவில் வேதனையும் பாதி,
அதை உணராமல் மூழ்கி போனோமோ?
உண்மை வரலாறு தேடி கற்காமல்,
பழம்பெருமை பேசி பாழாகி போனோமோ?

பழம் கதைகள் மட்டுமே பேசியது போதும்,
நாளை நம் சந்ததி நம்மை பேசட்டும் வா!
நம் பெருமை நாமே பேசியது போதும்,
அதை அடுத்தவர் பேசட்டும் வா!

9 comments:

Kamaraj said...

இதை எழுத தூண்டிய பார்த்தி-க்கு என் நன்றி!

ஆ.ஞானசேகரன் said...

//நம் பெருமை நாமே பேசியது போதும்,
அதை அடுத்தவர் பேசட்டும் வா! //


ம்ம்ம்ம்ம்...

நல்லாயிருக்கு cortext

பழமைபேசி said...

பழமை பழமை என்று பாவனை பேசலன்றிப்
பழமை இருந்த நிலை-கிளியே,
பாமரர் ஏதறிவார் -- பாரதி

Kamaraj said...

//ஆ.ஞானசேகரன்said...
நல்லாயிருக்கு cortext//

நன்றி!

Kamaraj said...

//பழமைபேசிsaid...
பழமை பழமை என்று பாவனை பேசலன்றிப்
பழமை இருந்த நிலை-கிளியே,
பாமரர் ஏதறிவார் -- பாரதி//

வருகைக்கு நன்றி! நான் இங்கே வருத்தப்படும் பழமை பேசியாக நீங்கள் தெரியவில்லை. உங்கள் பேச்சு தொடர என் வாழ்த்துக்கள்!

Kamaraj said...

பழமை முற்றிலும் தவறு என்பதோ, புதுமை முற்றிலும் சரி என்பதோ என் நோக்கம் அல்ல. பழமையின் நிறைகளை காணும் அதே வேளையில் குறைகளையும் அறிந்து கொள்ள தவறி விட்டோம் என்பதே என் எண்ணம். ஒன்றிலுள்ள குறைகளை நாம் ஏற்றுக்கொள்ளாத வரை, அதை தாண்டி எப்படி செல்ல முடியும். இதுவும் நம் மொழி அழிந்து வந்ததற்கு/வருவதற்கு ஒரு காரணமாக இருக்க வேண்டும்.

தமிழ் தாத்தா செய்தது போன்ற உருப்பிடியான வேலைகளை, தமிழை காப்பாற்றுவதாக கூறுவோர் யாரும் இன்று செய்வதில்லை. தமிழ் வடமொழியிலிருந்து தனிப்பட்டது என்று ஆராய்ச்சியுடன்... ஆதாரத்துடன் வைத்ததில் நம் அறிவும் வளர்கின்றது; அடுத்தவர் அறிவும் வளர்கின்றது. "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி" - என்று பீற்றுவதில் உண்மையும் இல்லை, எந்த அறிவும் இல்லை. தனி மனிதாக ஒரு வள்ளுவனோ, ஒரு பாரதியோ சிலவற்றை தவற விட்டதில் தப்பில்லை, அதை ஒரு சமூகமாக நாமும் தவற விட்டது தப்பு.

Kamaraj said...

பழைய கணக்கு:
http://icortext.blogspot.com/2011/05/blog-post.html

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

:)) பழமையண்ணா.. ரீடர்ல பாத்துட்டு முதல்ல உங்க இடுகைன்னே நினைச்சுட்டேன்.. கார்ஸ் சொல்ல வருவது, காரணங்களை அறிய கேள்விகள் கேட்கப் பழகி, உணர்வுப்பூர்வமான நிலையிலிருந்து அறிவார்ந்த சமூகமாக மாறினால், பிற்காலத்தில் நிகழக் கூடிய தவறான பரப்புரைகளைத் தடுக்க முடியும்ன்னு.. நாம் வேண்டுவதும் அதே தான் இல்லையா??

Kamaraj said...

:) மிக்க நன்றி எல் போர்ட்!!!