03 December 2010

வரலாற்று படங்கள்

இது நம் முன்னோர்களுக்கு தெரியாத நம் வரலாறு!

(கீழே உள்ள படங்கள் அனைத்தும் பெரிய சுவரொட்டி அளவு படங்கள். அவற்றின் மேல் சொடுக்கி பெரிதாக்கவும்.)


படத்தில் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக...
  • 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன்பு பெரு-வெடிப்பு நம் அண்டத்திலுள்ள அனைத்து கட்டுமான பொருட்களையும் (அடிப்படை துகள்கள்) உருவாக்கியது. அப்பொழுது இந்த அண்டம் குவாண்ட்டம் இயக்கவியலின் ஆதிக்கத்தில் இருந்தது. மற்ற இயற்கை விசைகளை விட புவியீர்ப்பு மிகவும் பலவீனமானதால், அப்பொழுது அதனுடைய தாக்கம் பெரிதாக எதும் இல்லை.
  • அண்டம் ஒளியை விட வேகமாக விரிவடைந்தது. (ஒளிவேகம் தோராயமாக ஒரு வினாடிக்கு 3,00,000 கிலோ மீட்டர்) [படத்தில்: Inflation = வீக்கம்]
  • 400,000 வருடங்களுக்கு பின் பெரு-வெடிப்பின் பின்ஒளிர்வு ஒளி. இதை நாம் WMAP என்ற செயற்கைகோள் மூலம் துள்ளியமாக படம் பிடித்துள்ளோம். அதையே கீழே உள்ள படம் காட்டுகின்றது. இது நம் அண்டத்தின் குழந்தை படம். இதிலிருந்து கடந்த காலம், எதிர்காலத்தை கணிக்க இயலும். [படத்தில்: Afterglow Light Pattern 400,000 yrs.]
  • அதன் பிறகு எந்த ஒளியிம் (மின்காந்த அலைகள்) இல்லாத ஒரு இருண்ட காலம். [படத்தில்: Dark Ages]
  • அடிப்படை துகள்கள் ஒன்றுகொன்றுடன் இணைந்து முதல்நிலை அணுக்கள் உருவானது. மேலும் அவை புவியீர்ப்பு விசையால் ஒன்றுகொன்றுடன் இணைந்து முதல் நட்சத்திரம், 400 மில்லியன் வருடங்களுக்கு பிறகு உருவானது. [படத்தில்: 1st Stars about 400 million yrs.].
  • முதல்நிலை அணுக்களை (ஹைட்ரஜன், ஹீலியம்) கொண்டு உருவான நட்சத்திரத்திரங்கள் அதன் வெப்பத்தில் மற்ற உயர்நிலை (அதிக அணு எண் கொண்ட) அணுக்களை உருவாக்கியது. அந்த அணுக்களை கொண்டு கோள்களும், உயிர்களும் உருவாகின (நாம் நட்சத்திர தூசியிலிருந்து உருவானவர்கள்!). பெரு-வெடிப்பிலிருந்து அண்டம் விரிவடைந்து கொண்டே உள்ளது. மேலும் தொடர்ந்த நட்சத்திரங்கள் இறப்பும், புதிய நட்சத்திரங்கள் பிறப்பும் இதில் அடக்கம். நட்சத்திரங்கள் இணைந்து நட்சத்திர மண்டலங்கள் உருவாகின. கீழே உள்ள படம் நமது பால்வழி மண்டலத்தை காட்டுகின்றது. [படத்தில்: Development of Galaxies, Planets, etc.]
  • சமீபத்திய கடந்த காலத்தில் நமது அண்டம் போதிய அளவு விரிவடைந்து விட்டதால், இப்பொழுது இருணாற்றல் எனப்படும் வெற்றிட ஆற்றலினால் வேகமாக விகிதத்தில் விரிவடைந்து கொண்டுள்ளது. [படத்தில்: Dark Energy Accelerated Expansion]

(If clicking on the image does not work, try here)

இது நமது பால்வழி மண்டலத்தை காட்டுகின்றது. இதில் நமது நட்சத்திரமான சூரியன் (படத்தில் 'We are here' என குறிக்கப்பட்டுள்ளது) ஒரு சுருளியில் உள்ளது. இது போல பல்லாயிரம் கோடி நட்சத்திர மண்டலங்கள் நம் அண்டலத்தில் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் பல்லாயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திலும் பல கோள்கள் உள்ளன.

(If clicking on the image does not work, another link here OR try here)

உயிரின-தொடர்பு-மரம் அல்லது உயிரினங்களின் பரிணாமத் தொடர்பு: உள் வட்டத்திலிருந்து (4000 மில்லியன் வருடங்களுக்கு முன்பிலிருந்து) வெளி வட்டமாக (இன்று வரை)...
  • நமது பூமியின் வயது 4500 மில்லியன் வருடங்கள். முதல் உயிர் வேதி மூலக்கூறு 4000 மில்லியன் வருடங்களுக்கு முன்பு தோன்றியது. இது இன்றிருக்கும் எளிய உயிரை விட மிக எளிய மூலக்கூறு. ஆனாலும் வைரத்தை விட பல..பல..மடங்கு அரிதாக உருவான ஒன்று. அந்த ஒன்றிலிருந்து இயற்கை-தேர்வு-முறையில் எளிமையான உயிர்களிலிருந்து சிக்கலான உயிர்கள் வரை பரிணாம வளர்ச்சியடைந்தன. படத்தில் இடபக்கத்திலிருந்து வலபக்கமாக, பாக்டீரியா, தாவரங்கள் முதல் விலங்குகள் வரை காட்டபட்டுள்ளது. இறுதியில் மனிதன் (பாலூட்டிகள்) காட்டபட்டுள்ளது.
  • பல காலகட்டங்களில் நிகழ்ந்த பூகோள பனியுகங்களும் (Ice Ages), உயிரன-பேரழிவுகளும் (Mass extinctions) காட்டபட்டுள்ளது. 65 மில்லின் வருடங்களுக்கு முன், கடைசியாக நிகழ்ந்த உயிரன-பேரழிவில் டைனசார்கள் அழிந்து போயின.
  • படத்தின் அடியில் சொல்லப்பட்டுள்ளது போல், அழிந்து போன சில உயிரங்கள் மட்டுமே இங்கே காட்டப்பட்டுள்ளது. பெரும்பான்மையான கெட்ட வடிவமைப்புகள் மடிந்து, பிழைத்தவற்றை மட்டுமே இன்று நாம் காணுவதால், அவை சுற்று சூழலுக்கு ஏற்ற வகையில் யாரோ உருவாக்கி உள்ளது போல் தோற்றமளிக்கின்றது. பூமியில் தோன்றிய 99.9% உயிரனங்கள் இன்று இல்லை!

** மில்லியன் = பத்து இலட்சம் = 10,00,000
*** பில்லியன் = நூறு கோடி = 100,00,00,000
**** இங்குள்ள படங்கள் இணையதளத்திலிருந்து பெறப்பட்டவை (Google Search). படங்களை சுட்டும் போது அந்த இணையதளங்களுக்கு நேரடியாகச் செல்லும்.

12 comments:

CorTexT (Old) said...

அண்ட காலவரிசையை மனதளவில் புரிந்து கொள்வது நமது மூளைக்கு சற்று கடினமானது. எனவே, இந்த 13.7 பில்லியன் காலகட்டத்தை ஒரு வருடமாக நினைத்தால் அதில் ஒவ்வொரு மாதமும் 1 பில்லியனுக்கும் சற்றே அதிகமான வருடங்களை குறிக்கும். ஜனவரி முதல் தேதி பெரு-வெடிப்பு உண்டானது. செப்டம்பர் 14 பூமி, செப்டம்பர் 25 முதல் உயிர் மூலக்கூறு, டிசெம்பர் 26 முதல் பாலூட்டி, டிசெம்பர் 30 முதல் மனித வகையினம் உருவானது. கடைசி மாதம், கடைசி நாள் (டிசெம்பர் 31) மனிதன் உருவானான். நாம் அறிந்த (எழுதப்பட்ட) மனித வரலாறு அனைத்தும் கடைசி 10 வினாடிகளுக்குள் அடங்கும். ராஜ ராஜக்கள், ராணிகள், அனைத்து போர்கள், நாம் படித்த, நாம் அறிந்த அனைத்து மனிதர்களும் இந்த சில் வினாடிகளுக்குள் அடக்கம்.

http://www.youtube.com/watch?v=Ln8UwPd1z20

ம.தி.சுதா said...

அருமையாக படங்களுடன் விளக்கியமைக்கு மிக்க நன்றி....

நல்ல பல புது விடயங்களை அறிந்து கொண்டேன் மிக்க நன்றி...


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்

CorTexT (Old) said...

//ம.தி.சுதா said...
அருமையாக படங்களுடன் விளக்கியமைக்கு மிக்க நன்றி....
நல்ல பல புது விடயங்களை அறிந்து கொண்டேன் மிக்க நன்றி...
//

வருகைக்கும் நன்றிக்கும் நன்றி :-)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நிறைய படிக்கறீங்க :)

விளக்கம் நன்றாக இருந்தது.. தொடருங்க..

CorTexT (Old) said...

//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
நிறைய படிக்கறீங்க :)
விளக்கம் நன்றாக இருந்தது.. தொடருங்க..
//

நன்றி [L]!

எல்லாம் உலகை, வாழ்கையை புரிந்து கொள்ளும் ஆவல் தான். அது ஒரு அழகான தேடல்! :-) தேடியதில் சில இங்கே என் எழுத்துக்களாய்... யாருக்கேனும் அது பயன்பட்டால், தொடர்ந்து எழுதுவேன்.

RMD said...

//யாருக்கேனும் அது பயன்பட்டால், தொடர்ந்து எழுதுவேன்//

அருமையான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துகள்.

CorTexT (Old) said...

//RMS Danaraj said...
அருமையான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துகள்.
//

கருத்துக்கும், ஊக்கத்திற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

Thekkikattan|தெகா said...

wow! i've missed this post... let me read in full :)

Thekkikattan|தெகா said...

a suggestion...

//புவியீர்ப்பு விசையால்//

இங்கு புவி’ ஈர்ப்பு விசை என்று கூறுவதை விட வெறும் ‘’ஈர்ப்பு விசை’’ என்று கூறிவிட்டாலே போதுமென்று நினைக்கிறேன். ஏனெனில் ’புவி’ என்று வரும் பொழுது அது நமது கோளின் ஈர்ப்புடன் தொடர்புடையதாக புரிந்து கொள்ளப்படலாம் ;-)

CorTexT (Old) said...

//wow! i've missed this post... let me read in full :) //
நன்றி தெகா!


//இங்கு புவி’ ஈர்ப்பு விசை என்று கூறுவதை விட வெறும் ‘’ஈர்ப்பு விசை’’ என்று கூறிவிட்டாலே போதுமென்று நினைக்கிறேன். ஏனெனில் ’புவி’ என்று வரும் பொழுது அது நமது கோளின் ஈர்ப்புடன் தொடர்புடையதாக புரிந்து கொள்ளப்படலாம் ;-)
//

சிறு வயதில், ஒரு கட்டுரையில் நிலாவின் புவியீர்ப்பு விசை என்று படிக்கும் போது எனக்கு உருத்தியது. [புவி = பூமி] என்றால் அதில் உருத்தல் இருக்கும். அதையே [புவி = நிலம்] என்று எடுத்து கொண்டால் அது அவ்வளவாக உருத்தாது. மேலும் [Gravity = ஈர்ப்பு] என்பதும் உருத்துகின்றது (காந்த ஈர்ப்பு விசையை எப்படி சொல்வது). "ஈர்ப்பு" மிகவும் பொதுவான வார்த்தையாக உள்ளது.

Gravity என்பது இரு நிறை (Mass) கொண்ட பொருட்களுக்கிடையே உள்ள ஈர்ப்பு விசை என்பதால் அதை நிறையீர்ப்பு விசை என்பது பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து. [Gravity = நிறையீர்ப்பு].

Thekkikattan|தெகா said...

check this one out...

http://dharumi.blogspot.com/2010/12/463.html

CorTexT (Old) said...

Thanks for the link தெகா.