10 October 2010

எந்திர வாழ்கையிலே

தொடர்ந்து நிகழும் கணக்கிலடங்கா மாற்றங்களில், ஒரு சில அதன் சுற்று சூழலுக்கு ஏற்றால் போல் இருந்தால், அவை பிழைத்து அடுத்த தலைமுறைக்கு செல்லும். மற்றவை மடிந்து போகும். நாளடைவில் பிழைத்தவற்றை நோக்கினால், யாரோ அவற்றை அதன் சுற்றுசூழலுக்கு ஏற்றால் போல் உருவாக்கி உள்ளார் என்பது போல் தோன்றும். அப்படி இயற்கை-தேர்வு-முறையில் உருவான எந்திரங்கள் தான் பாக்டீரியா, தாவரங்கள், மீன்கள் முதல் விலங்குகள் வரை, மனிதன் உட்பட! இந்த எந்திரங்களின் வடிவமைப்பு அவற்றின் ஜீன்களில் (DNA) உள்ளது.

உயிர் எந்திரங்களின் அடிப்படை நோக்கம் பிழைத்திருந்து இனப்பெருக்கம் செய்தல். ஏனெனில், அப்படி பட்டவை மட்டுமே பிழைத்திருக்கின்றன. நம் உடலின் ஒவ்வொரு அங்கங்களும், மூளையின் ஒவ்வொரு எண்ணங்களும், வாழ்கையின் ஒவ்வொரு குறிகோள்களும் இந்த அடிப்படை நோக்கத்திலிருந்து உருவாக்கப் பட்டதே!

நாம் பிழைத்திருக்க உணவு வேண்டும்; அதை தேட கால்கள் வேண்டும்; பறித்து, பிடித்து உண்ண கைகள் வேண்டும்; உணவை கண்டுகொள்ள கண்களும், மூக்கும் வேண்டும்; உண்பதற்கு வாய் வேண்டும். இந்த உடல் உருப்புகளின் தசைகளை கட்டுபடுத்தி செயல்படுத்த நரம்பு மண்டலமும், மூளை வேண்டும்.

உடலுக்கு தேவையான நீர் முற்றிலும் குறைவதற்கு முன்பே மூளை நமக்கு தாகத்தை ஏற்படுத்தி எச்சரிக்க வேண்டும்; இரத்ததில் ஊட்டச்சத்து குறையும் முன்பே பசியை ஏற்படுத்தி எச்சரிக்க வேண்டும். உடல் செல்கள் அதிகமாக வெப்பத்தால் சேதமடையும் முன், வியர்வையை உருவாக்கி உடல் வெப்பத்தை குறைக்க வேண்டும். உடல் செல்கள் குளிரால் சேதமடையும் முன், உடல் நடுக்கத்தை ஏற்படுத்தி உடல் வெப்பத்தை கூட்ட வேண்டும். இனப்பெருக்கம் செய்ய பால் எண்ணங்களை உருவாக்க வேண்டும்; அதற்கேற்ப உடலை தயார்படுத்த வேண்டும்.

மூளை நம் கால்களுக்கு சமமான அளவிற்கு (25%) ஆற்றலை செலவிடுகின்றது. எனவே அது பொதுவாக சாதாரண வேகத்தில் இயங்க வேண்டும். ஆனால் ஆபத்து போன்ற முக்கிய சமயங்களில் மூளை இயங்கும் வேகத்தை கூட்ட வேண்டும். மூளை ஒவ்வொன்றின் நன்மை தீமைகளையும் லாப நட்டங்களையும் அறிந்து சீர்தூக்கி பார்க்க வேண்டும். ஆனால் எதிரியை போராட முடிவெடுத்த பிறகு, மூளை சீர்தூக்கி பார்த்தல் பகுதியை அணைத்து விட்டு, மூளையின் ஆற்றலையும் உடலையும் போராட்டத்திற்கு ஒருமுகப்படுத்தி தாயார்படுத்த வேண்டும். இப்படிபட்ட மூளையின் நிலையை (மன-நிலை; கால்கள் செயல்பட்டால் நடத்தல், மூளை செயல்பட்டால் மனம்) கோபம் என்கின்றோம். எனவே தான் - ஆத்திரக்காரனுக்கு அறிவு மட்டு - என்கின்றோம். ஒவ்வொன்றின் குறை நிறைகளை அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் பால்-துணையின் மேல், மூளை அப்பகுதியின் செயலை அணைத்து விட வேண்டும். இப்படிபட்ட மூளையின் நிலையை காதல் என்கின்றோம். எனவே தான் - காதலுக்கு கண் இல்லை - என்கின்றோம். எனவே தான் காதலின் போது குறைகள் அற்ற சொர்க்கமாக இவ்வுலகை காண்கின்றோம். பொதுவாக மூளை பல விடயங்களை அலசி ஆராய்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஆகவே சாதாரணமாக மனம் அலைபாய்தல் எளிது. ஆனால் நம் குழந்தைகளின் மேல், நம் கவனத்தை ஒருமுகப்படுத்தி, அதன் நல்லது கெட்டதை அறிந்து அதற்கேற்ப ஆற்றலை செலவிடவேண்டும் வேண்டும். இப்படிபட்ட மூளையின் நிலையை பாசம் என்கின்றோம்.

மூளை அனுபவத்தில் ஏற்படும் புதிய நிகழ்வுகளை நினைவில் கொள்ள வேண்டும்; புதிய விசயங்களை கற்று கொள்ள வேண்டும்; புதிய திறமைகளை கற்று கொள்ள வேண்டும். அது மட்டுமில்லாமல், ஏற்கனவே உள்ள உணர்ச்சிகளை புதிய கற்றலின் மூலம், மூளை கட்டுபடுத்த வேண்டும். மூளை இப்படி பலவற்றை செயல்படுத்துவதோடு, அதன் நிலையையும் தெரிந்து கொள்ள வேண்டும்; தனக்கு என்ன தெரியும் தெரியாது, தன் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதையும் தெரிந்து தெரிந்து கொள்ள வேண்டும்; இதை நாம் சுயநினைவு என்கின்றோம். இவ்வாறு ஜீன்கள் நம் மூளையில் எழுதிய கட்டளையை செயல்படுத்துகின்றோம். இது நம் எந்திர வாழ்கை! இந்த எந்திரம் செயல்படும் போது உயிர் என்கின்றோம், அது செயல் இழக்கும் போது மரணம் என்கின்றோம்.

புலி: இப்பொழுதெல்லாம் சுவாசம் நின்ற பிறகும், இருதயம் நின்ற பிறகும் கூட உயிர் பிழைக்க வைக்க முடிகின்றதே?

ஆமை: பாக்டீரியா என்பது ஒரு செல் உயிரினம். அதன் செல்லின் எந்த பகுதி பழுதடைந்தாலும் அல்லது எந்த வேதிவினை தடைபட்டாலும் அது அதன் மரணம். நாம் பல-செல் உயிரினம். நாம் பல கோடி செல்களின் கூட்டு முயற்சி. அதில் ஒரு செல் பழுதடைந்தால், நம் உடல் அதை மாற்றிவிடும். ஆனால் ஒரு முக்கிய உருப்பே பழுதடைந்தால், அது மற்ற செல்களையும் சேதப்படுத்தி மொத்த உடலும் மெதுவாக செயலிழந்து போகும். சுவாசமோ, இருதயமோ நின்ற பிறகு, நம் உடல் செல்கள் மெதுவாக பழுதடைய ஆரம்பிக்கும். அதற்கு முன், செயற்கையாக சுவாசத்தை, இருதயத்தை இயக்கப்படுத்தினால், நாம் மீண்டு வரலாம். இன்றைய மருத்துவ தொழிற்நுட்பத்தில், பெரும்பான்மையான மூளையின் செல்கள் செயல் இழந்தால் அதை மரணம் எனலாம். ஏனெனில் மற்றவற்றிக்கு சில மாற்று வழிமுறைகளை கண்டறிந்துள்ளோம். நாளை மூளைக்கும் மாற்று வழி கண்டறியலாம்.

ஒரு கருதுகோள். உன் கை கால்களை இழந்து நீ செயற்கை அங்கங்களை பொருத்தி கொண்டால், அது நீதானா? (மூளையின் கட்டளைகளை மின்னனு செய்திகளாக மாற்றி அதை கொண்டு செயற்கை அங்கங்களை இயங்க வைப்பது. இதில் பல தொழிற்நுட்ப இடற்பாடுகள் இருந்தாலும் கை, கால்கள், காது, கண்கள் போன்றவற்றை ஓரளவு செயற்கையாக மாற்றி உள்ளோம்)

புலி: அப்பொழுதும் அது நான் தான்.

ஆமை: மூளையின் செல்கள் தொடர்ந்து செயல்பட நல்ல இரத்தத்தை தொடர்ந்து அனுப்ப வேண்டும். இருதயம், நுரையீரல் என உன் உடலின் அனைத்து உருப்புகளையும் நீக்கிவிட்டு செயற்கையாக மூளை நல்ல இரத்தம் கிடைக்கும் படி செய்தால், அப்பொழுதும் அது நீயா?

புலி: நான் தான்.

ஆமை: மூளையில் உள்ள செல்கள் (நரம்பணுக்கள்) எப்படி செயல்படுகின்றது என்பது நமக்கு தெரியும். ஒரு செல்லை அல்லது பல செல்களை மின்னனு-சிப்பை கொண்டு மாற்றி அமைக்க முடியும் (இதை எலி மற்றும் குரங்கின் மூளை செல்களுக்கு ஏற்கனவே நாம் செய்துள்ளோம்). இப்படி உன்னுடைய ஒவ்வொரு செல்லையும் மின்னனு-சிப்பை கொண்டு மாற்றி அமைத்தால், நீ எப்படி செயல்படுகின்றாயோ அதே போலவே செயல்படுவாய். அப்பொழுதும் அது நீயா?

புலி: ம்ம்ம், நான் தான் என்று நினைக்கின்றேன்!

ஆமை: இப்பொழுது உனக்கு மின்சக்தி தரும் பேட்டரி மட்டும் இருந்தால் போதும்.

புலி: நாம் உருவாக்கும் எந்திரங்கள் உயிரினங்களை போல் செயல்படுவதில்லையே?

ஆமை: உயிரினங்கள் மிகவும் சிக்கலான நேனோ-தொழிற்நுட்பத்தில் (அணு மற்றும் வேதி-மூலக்கூறுகள் அளவில்) உருவாக்கப்பட்டவை. இப்பொழுது தான் நாம் நேனோ-தொழிற்நுட்பத்தில் கால் வைத்துள்ளோம். ஆனாலும் மற்ற தொழிற்நுட்பத்திலும் பல நல்ல தீர்வுகளை காண முடியும். ஒவ்வொறு முறையிலும் நிறை குறைகள் உண்டு. விலங்குகள் எழும்புகளையும், ஆயிரக்கணக்கான நரம்பு மற்றும் தசைகளையும் கொண்டு உருவான கால்கள் முலம் இடம்பெயருகின்றன. நாம் செயற்கை எந்திரங்களுக்கு (கார் வண்டிகள்) சக்கரங்களை பயன்படுத்துகின்றோம். பறவையை போல் விமானத்தையும், மேலும் முற்றிலும் வேறுபட்ட முறையிலும் இயங்கும் இராக்கெட்டையும் உருவாக்கி உள்ளோம். மூளையை போல் கணினியை உருவாக்கியுள்ளோம். இன்று செயற்கை-அறிவில் உருவாக்கப்பட்ட கணினி-மென்நிரல்கள் செஸ் விளையாடுகின்றன, பலவகையான கணித சிக்கலுக்கு தீர்வு கண்டுபிடிக்கின்றன, பல துறைகளிலில் (மண்ணியல், இருதயவியல்,..) நிபுணர்களை போல் ஆலோசனை வழங்குகின்றன, பங்கு சந்தையில் பங்குகளை வாங்குகின்றன.

இன்று வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட செயற்கை-அறிவு-மென்நிரல்கள் ஒன்றுக்கொன்று-தொடர்புடைய ஆயிரக்கணக்கான செய்திகளை கொண்டவை. ஆனால் மனிதனை போன்ற பொது-அறிவுக்கு ஒன்றுக்கொன்று-தொடர்புடைய பல கோடி செய்திகளை கொண்ட மென்நிரல்களை உருவாக்க வேண்டும். அதை நேரடியாக உருவாக்குவதற்கு பதில், குழந்தைகள் உலகத் தொடர்பு மற்றும் அனுபவத்தின் மூலம் கற்பது போல் கற்கும்-மென்நிரல்களை உருவாக்கலாம். மனிதனை போன்ற தானியங்கு-எந்திரத்தை உருவாக்கினால் அதற்கும் சுயநினைவு மற்றும் ஒருவகையான உணர்ச்சிகள் இருக்கும்.

புலி: எப்படி?

ஆமை: அது அதை எப்படிபட்ட கட்டமைப்பு, கற்றும் உத்திகளை கொண்டு எந்த நோக்கத்திற்காக உருவாக்குகின்றோம் என்பதை பொருத்தது. குறைந்த பட்சம் அதற்கு அதனுடைய சக்தி மூலத்தை (மின் சக்தி வழங்கும் பேட்டரி) பற்றி ஒரளவாவது தெரிய வேண்டும் - அதிக பட்ச சேமிக்கும் சக்தி எவ்வளவு? ஒவ்வொரு வேலைக்கும் எவ்வளவு சக்தி தேவைபடும்? இன்னும் எவ்வளவு நேரம் சக்தி இருக்கும்? எப்படி பட்ட வழிகளில் சக்தியை பெறமுடியும்? அதன் அங்களை பற்றியும், அதை கொண்டு என்ன என்ன செய்ய முடியும் என்பதையும் அறிய வேண்டும். மேலும் உலகத்தை பற்றியும் அதன் காரண-காரியங்களை பற்றியும் கற்று கொள்ள வேண்டும்; அதற்கு அதன் கற்றும் திறனை பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதற்கு தனக்கு என்ன தெரியும்-தெரியாது, என்ன திறமைகள் இருக்கு-இல்லை எனபதை தெரிய வேண்டும். மொத்தத்தில் சுய-அறிவு சுயநினைவு வேண்டும். அதற்கு சுய-அறிவு இருந்தால், அதன் மூளையின் ஒவ்வொரு நிலையை பற்றியும் ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும். அதன் ஒவ்வொரு நிலையும் அதன் உணர்ச்சிகளே!

ஒரு இலக்கை அடைய அதை திட்ட மிட வேண்டும். நிஜ உலக இலக்குகள் செஸ்-விளையாட்டை விட பல கோடி மடங்கு சிக்கலானவை. பல வழிகளிலிருந்து அதன் நன்மை-தீமைகளை அறிந்து தன்னுடைய பலம்-பலவீனம் அறிந்து ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்; தெரியாவற்றை பலவழிகளில் கற்று கொள்ள வேண்டும்; ஒவ்வொரு துணை-இலக்குகள் வெற்றி-தோழ்வி அடையும் போது, அதை அறிந்து கற்று கொள்ளும் நிலை ஒருவகையில் சந்தோசம்-விரக்தியை போன்றது தான். புதியவற்றவை கற்கும் போதும் ஏற்படும் நிலை, புரியாதவற்றால் குழம்பி அதை புரிந்து கொள்ள முற்படும் நிலை என பலவாறு அதன் நிலைகள் விரிவடையும்.

புலி: நாம் உருவாக்கும் செயற்கை எந்திரங்கள் நம்மைவிட மேம்பட்டதாக இருக்கும் அல்லவா?

ஆமை: செயற்கை எந்திரங்களின் மூளை அளவையும் வேகத்தையும் பலமடங்கு அதிகப்படுத்தலாம். தற்காலிக நினைவையும், சுய-அறிவையும் பலமடங்கு உயர்த்தி அதன் அறிவு-திறனை பல மடங்கு உயர்த்தலாம். அப்படிப்பட்ட எந்திரங்கள் நாளை நம்முடன் வலம்வரலாம்! அவை புற்றுநோய், HIV போன்ற நோய்களுக்கு மருந்து கண்டறியலாம், நாட்டின் உலகத்தின் பொருளாதார பிரச்சனைகளுக்கு, உலக-வெப்பமயமாதலுக்கு நல்ல தீர்வு காணலாம். அப்படிப்பட்ட எந்திரம் அதைவிட மேம்பட்ட எந்திரத்தை உருவாக்கலாம்! யார் கண்டார், நாம் நம் சந்ததிகளை ஜீன்கள் மூலமாக அனுப்பவதற்கு பதிலாக நாமே நம் மூளையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லலாம்!

12 comments:

ஆ.ஞானசேகரன் said...

//நாம் நம் சந்ததிகளை ஜீன்கள் மூலமாக அனுப்பவதற்கு பதிலாக நாமே நம் மூளையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லலாம்! //

இந்த நிலையை எட்ட காலம் அதிகமாகும் என்றே தோன்றுகின்றது.. அது தேவைதானா? என்ற எண்ணங்களும் இருக்கின்றது...

நல்ல அலசல்.... தமிழ்மணத்தில் இணைக்கலாமே.. பலரும் படிக்க வாய்ப்பு இருக்கும்

CorTexT (Old) said...

கருத்துக்கு நன்றி!

அதை ஜீரணிப்பது கடினம் தான். அதை எட்ட எவ்வளவு காலம் ஆகும் என்பதை விட, அதை ஒரு நாள் எட்ட முடியும் என்பதும், அது தற்போதைய தொழிற்நுட்ப குறை மட்டும் தான் என்பதும், நம்முடைய வாழ்கையின் சாரத்தை அறிய உதவலாம்.

அது தேவைதானா என்பது நாம் வெறும் வேதிகூறுகளின் (ஜீன்கள்) கட்டளைக்காகத்தான் வாழ வேண்டுமா? இவ்வுலகிலுள்ள போர்களுக்கும் சண்டைகளுக்கும், துயரங்களுக்கும் தீர்வு எதுவும் வேண்டாமா? அனைத்து உயிரினங்களும் பல்வேறு இயற்கை சீற்றங்களினால் அழிந்து கொண்டுதான் உள்ளது; மனிதனின் அழிவும் நிச்சயம் என்பதால், அவனது சாரத்தை வேறுவழியில் சற்றே நிலைத்திருக்க வைக்க முடியுமா? என்ற பல கேள்விகளை பொருத்தது.

தமிழ்மணத்தை பற்றி பிறகு பேசலாம்.

Seeker said...

ரொம்ப டெக்னிகலா இருக்கு, but quite interesting. இந்த மாதிரி அறிவியல் விஷயங்களை தமிழ்ல அனுபவிப்பதற்கு கொஞ்சம் சுகமா இருக்கு

>>நாம் நம் சந்ததிகளை ஜீன்கள் மூலமாக >>அனுப்பவதற்கு பதிலாக நாமே நம் மூளையை >>அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லலாம்!

புரியல? Intellectual transformation? So far I believe every individual must learn by them self. battery charge பண்றா மாதிரி plug சொருகி அறிவை வளர்துக்கிறது நல்ல இருக்கே! straw போட்டு அறிவை உறிஞ்சி எடுத்துக்கலாம்!


How about genetic replication?

Kumaresh said...

மச்சி...என்னல இண்ட அலவுக்கு தான் அடிக்க் முடியுது. னி எப்ப்டி சுஜாதா அலவுக்கு அடிக்ர...கலக்குர காமா..

CorTexT (Old) said...

கருத்துக்கு நன்றி Ravi!

நான் முழுமையாக விளக்கவில்லை, அதனால் புரியவில்லை என நினைக்கின்றேன். மனிதனின் சாரம் அவனது மூளை. மூளை என்பது நரம்பணுக்களின் இணைப்பு. நாளை மூளையின் இணைப்புகளை கணினி போன்ற மற்றொரு அமைப்புக்கு நகல் எடுக்க முடியலாம். அதனால் ஏற்படும் தனிமனித/சமூக மாற்றங்கள் எப்படி இருக்கும்? Singularity என்ற Concept உண்டு, முடிந்தால் படித்து பார்க்கவும்.
http://en.wikipedia.org/wiki/Technological_singularity

// How about genetic replication? //
இயற்கையிலே உள்ளது தானே. அதை மேலும் விரிவுபடுத்தி மாற்றி அமைக்கவும் முடியலாம் (Genetic Engineering + Nano-Technology)
http://en.wikipedia.org/wiki/Transhumanism

CorTexT (Old) said...

//Kumaresh said... மச்சி...என்னல இண்ட அலவுக்கு தான் அடிக்க் முடியுது. னி எப்ப்டி சுஜாதா அலவுக்கு அடிக்ர...கலக்குர காமா..
//

கருத்துக்கும் முயற்சிக்கும் நன்றி. எல்லாம் போக போக பழகிடும் மச்சி!

Thekkikattan|தெகா said...

//நல்ல அலசல்.... தமிழ்மணத்தில் இணைக்கலாமே.. பலரும் படிக்க வாய்ப்பு இருக்கும்//

நானும் இதனையே கேக்கிறேன் ஏன் இணைக்கவில்லை. இணைத்தால் பரவலாக போய்ச் சேருமே...

you might be interested in taking a look at this post... talking about our culture, living together etc., - நோக்கம் நம் மக்களிடத்தே புரிதலை ஏற்படுத்தி ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்ப்பதற்கென கண்ணுக்கு புலப்படாத கலாச்சாரம், பண்பாடு: A template post

CorTexT (Old) said...

Thekkikattan|தெகா said...
//நல்ல அலசல்.... தமிழ்மணத்தில் இணைக்கலாமே.. பலரும் படிக்க வாய்ப்பு இருக்கும்//

நன்றி தெகா. நீங்கள் கூறுவது tamilmanam.net என்றுதான் நினைக்கின்றேன். அதில் ஏற்கனவே register செய்துள்ளேன். வேறு ஏதாவது செய்ய வேண்டுமா என தெரியவில்லை.

உங்கள் பகிர்வுக்கும் நன்றி. மிக தேவையான பதிவ!

Thekkikattan|தெகா said...

உங்கள் கட்டுரை பொருத்து - நிறைய வாசித்திருக்கிறீர்கள். தமிழிலில் அனைத்தையிம் இணைத்து இணைத்து நீங்கள் கொடுத்திருக்கும் பாங்கு, அபாரம்! அனுபவித்து படித்தேன்.

*தமிழ்மணத்திலிருந்து confirmation மின்னஞ்சல் போல எதுவும் வந்ததா? ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் இடுகைகளை இங்கு வெளியிடும் பொழுதும், அங்கு சென்று உங்கள் தளத்தின் URL கொடுத்து பார்த்தீர்களா? ஆயின், தமிழ்மணம் என்ன சொல்லிற்று...??

CorTexT (Old) said...

உங்கள் கருத்துக்கு மீண்டும் நன்றி தெகா. தமிழ்மணத்தில் நான் இணைத்தில் சில தவறுகள் இருந்தது, சரி செய்து விட்டேன்.

//ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் இடுகைகளை இங்கு வெளியிடும் பொழுதும், அங்கு சென்று உங்கள் தளத்தின் URL கொடுத்து பார்த்தீர்களா?//
அப்படியா? இனி மேல் செய்கின்றேன்! :-)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

2001-A space odyssey பார்த்த மாதிரி இருக்கு :) அதுவும் கடைசி வரி அந்தக் கடைசி காட்சி மாதிரியே இருக்கு :)

CorTexT (Old) said...

நன்றி எல் போர்ட்.. பீ சீரியஸ்!
எல் போர்ட் பார்த்தால், பீ கேர்ஃபுல் :)