16 July 2010

மன விளையாட்டு



நான் விரும்பியதை எல்லாம், நான் அடைய முடியாது;
அதை நான் அறிவேன் நன்று; ஆனாலும்,
நான் அடைய விரும்புகின்றேன்...நான் அடைய முடியாததை.
என்ன வினோதம்?! இது என்னுடைய மனம்!

புகை பிடித்தல் கெடுதல், அதை நான் அறிவேன்.
பலவித பொருட்களும் கெடுதல், அதையும் நான் அறிவேன்.
அதிலிருந்து மீள நினைக்கின்றேன், ஆனால் என்னால் முடியவில்லை.
ஆக... என் மனம் மீள விரும்புகின்றது, ஆனாலும் அதற்கு மீள விருப்பமில்லை!
இப்பொழுது... என் மனம் யார் கட்டுப்பாட்டில் என்பதுதான், மிகப்பெரிய கேள்வியோ?!

ஆனாலும் நான் எப்படி மீள்வது?
இன்று ஒரு நாள் நிறுத்தினால்... சற்றே கொஞ்சம் குறைத்துக் கொண்டால்,
இனிதாக ஏதாவது கொடுத்து, என்னையே நான் ஊக்கப் படுத்தாலாம்.
கட்டுபாட்டு வேண்டும் போது, எனக்கே நான் லஞ்சம் கொடுத்து கொள்வேன்.
கடின உழைப்பு வேண்டும் போது, என்னையே நான் ஊக்கப்படுத்தி கொள்வேன்.
ஆறுதல் வேண்டும் போது, என்னையே நான் தேற்றி கொள்வேன்.
என் மனம் அதற்கே லஞ்சம் கொடுத்து கொள்கின்றது...
என் மனம் அதுவாக ஊக்கப்படுத்தி கொள்கின்றது...
என் மனம் அதுவாக தேற்றி கொள்கின்றது...
என் மனதிற்கே என் மனதை தெரியாதது போல்!

எப்படி என் நூற்றுக்கணக்கான தசைகளை ஒருங்கிணைத்து கட்டுபடுத்தி,
என்னை நான் சமன்நிலைபடுத்தி, என் கால்களை நகரவைத்தேன்,
என்பதை பற்றி ஒன்றும் நான் அறியேன்; ஆனாலும்,
நான் சுய-உணர்வோடு நடப்பதாக நினைக்கின்றேன்!

குரங்கினால் முடியும்; கைபை கால்குலேட்டரால் முடியும்; ஆனால்,
ஓர் ஏழு இலக்க எண்ணை, தற்காலிக நினைவில் வைக்க என்னால் முடியாது.
தற்காலிக நினைவாகட்டும் அல்லது நீண்டகால நினைவாகட்டும்,
எங்கு சேமித்தேன், எப்படி சேமித்தேன், எப்படி திரும்ப பெற்றேன்,
என்பதை பற்றி ஒன்றும் நான் அறியேன்; ஆனாலும்,
நான் சுய-உணர்வோடு நினைவில் கொள்வதாக நினைக்கின்றேன்!

எப்படி பொருளுக்கு ஏற்ற வார்த்தைகளை பொறுக்கி எடுத்தேன்,
எப்படி இலக்கணத்திற்கு ஏற்ப வார்த்தைகளை கோர்த்து வைத்தேன்,
எப்படி அர்த்தமுள்ள வரிசையில் வாக்கியங்களை அடுக்கி வைத்தேன்,
என்பதை பற்றி தெளிவாக நான் அறியேன்; ஆனாலும்,
நான் சுய-உணர்வோடு பேசுவதாக நினைக்கின்றேன்!

என் தண்டு வடம் சேதமடைந்தால், என் உடல் செயல்-முடக்கம் அடையும்.
என் பார்வை-மூளை சேதமடைந்தால், என் பார்வையில் குறை உண்டாகும்.
என் செவி-மூளை சேதமடைந்தால், என் கேட்டலில் குறை உண்டாகும்.
என் தொடு-உணர்-மூளை சேதமடைந்தால், என் தொடு-உணர்வில் குறை உண்டாகும்.
என் நுகர்-மூளை சேதமடைந்தால், என் நுகர்-உணர்வில் குறை உண்டாகும்.
மற்றும் பலவகை மூளை சேதத்தால்...
விருப்பு வெறுப்புகள், வலி, இன்பம், சாந்தம், கோபம்,
சுய-உணர்வு, திசை உணர்வு, கால உணர்வு, சொந்த-பந்த உணர்வு
என பலவகை உணர்வுகள் தடம்மாறி போகும்!
மற்றும் பலவகை மூளை சேதத்தால்...
வார்த்தைகளை அறிதல், முகங்களை அறிதல், இசையை அறிதல்,
என பலவகை அறிதல்கள் இல்லமால் போகும்!
மற்றும் பலவகை மூளை சேதத்தால்...
அறிந்து கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல், நினைவில் கொள்ளுதல்,
விளக்குதல், சிந்தித்தல், கட்டு படுத்துதல், முடிவெடுத்தல்
என பலவகை திறன்கள் இல்லமால் போகும்!
ஆனாலும்... இவை எல்லாம் நன்றாக வேலை செய்யும் போது,
அது என் முழு-சுதந்திர சுயேச்சையான எண்ணமாக நினைக்கின்றேன்!

6 comments:

CorTexT (Old) said...

இதை பக்டிக முடின்றகிதா? 55 சவிதகித பேளார்கல் மடுட்மே முயுடிம்.

நான் என்ன பறேடிகிக்ன்ன் எபன்தை எனான்ல் உண்யிமைல் புந்ரிது கொள்ள முகிடின்றது எபன்தை எனான்ல் நம்ப முடியவில்லை. மனித மதினன் இந்த திறன், கேம்பிரிஜ் பல்கலைகழக ஆச்ராயிசின் படி, எத்ழுதுகக்ள் எந்த வசையிரில் இக்ருக வேண்டும் எபன்து முகிக்யமில்லை, முதல் மறுற்ம் கடைசி எத்ழுது மடுட்ம் சயாரின இத்டதில் இக்ருக வேடுண்ம். மற்ற எதுழுத்க்கள் எபப்டி இடமாறியிருதாந்லும், நமாம்ல் பக்டிக முயுடிம். இது ஏனெறான்ல், மனித மனது ஒவொவ்ரு எத்ழுதையும் பப்டிபதில்லை, மொத்த வாத்ர்தையை பக்டிகிறன்து.

ஆ.ஞானசேகரன் said...

மனதை பற்றிய அருமையான இடுகை..

அன்புடன்
ஆ.ஞானசேகரன்..

தமிழ்மணத்தில் இணைக்கலாமே

CorTexT (Old) said...

நன்றி!

Thekkikattan|தெகா said...

:) ம்ம்ம் அழகான பதிவு! தமிழும் விளையாடுதுங்க.

// 55 சவிதகித பேளார்கல் மடுட்மே முயுடிம்.//

நானும் அந்த கிறுக்கன்ல ஒருத்தன் போல... :)) செம கூல் படிக்க, கிடு கிடுன்னு படிக்க முடிஞ்சிச்சு.

தருமி said...

//இதை பக்டிக முடின்றகிதா?//

எதாளிக முந்தடிது. கடஷ்மாக இலைல்யே!

CorTexT (Old) said...

நன்றி தெகா!
நன்றி தருமி!

அந்த கிறுக்கன்ல நானும் ஒருவன் தான்! :-) நாம் படிக்க கற்றும் போது, நம் மூளை வார்த்தைகளாக படிக்க ஒரு செயல்முறை நிரலை உருவாக்குகின்றது (மற்ற எல்லா கற்றலும் அப்படியே). பிறகு அந்த பகுதி மூளை சேதம் அடைந்தால் (stroke போன்றவற்றால்), அவர்களால் பார்க்க முடியும், என்ன எழுத்து என்றும் தெரியும், ஆனால் வார்த்தைகளாக படிக்க முடியாது!