28 November 2009

என் மேல் விழுந்த

Where were you?

Oh,
The single drop of rain that has landed on me,
Where were you all these days?
The lovely poem that I have written today,
Where were you all these days?
The gentle breeze that has awaken me,
Where were you all these days?
The melodious music that has mesmerized me,
Where were you all these days?
Like life trapped inside the body...
I was within you, all these days!


என்ன பாடல் என்று தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். இது வைரமுத்துவின் 'மே மாதம்' பாடல் வரிகள். எனக்கு முழு திருப்தி இல்லையென்றாலும், இது என்னுடைய ஆங்கில மொழிபெயற்பு. இதை நண்பர்களுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயற்க பலமுறை முயன்றுள்ளேன். நீங்கள் வேறுமாதிரி முயற்சித்தால்/யோசித்தால், இங்கே பகிர்ந்து கொள்ளவும்.

என் மேல் விழுந்த மழை துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்




5 comments:

CorTexT (Old) said...

ஒவ்வொரு வார்த்தையும் அல்லது வரிகளையும் அப்படியே மொழிபெயற்தால், அதன் உண்மையான சாறமோ, அழகோ அப்படியே அடுத்த மொழிக்கு செல்வதில்லை. அதற்கு அந்த மொழியின் நடை, உடை, பாவனை மற்றும் கலாச்சாரம் தேவைபடுகின்றது. இப்பொழுது, செயற்கை-அறிவு (Artificial Intelligence) முறையில் மொழிபெயற்ப்பு (Google Translate போல்) செய்ய முயற்சி செய்யப்படுகின்றது. அது முழுமையான வெற்றிபெற மனிதனின் ஆசா பாசங்களை, விருப்பு வெறுப்புகளை, கலாச்சார பேதங்களை செயற்கை-அறிவு அறிந்து கொள்ள வேண்டும்.

ஆ.ஞானசேகரன் said...

கிட்டதட்ட அப்படியே இருக்கு! ஆனாலும் தமிழில் உள்ள உணர்வு இல்லை என்றே சொல்ல வேண்டும்.. அதற்கு நீங்கள் சொல்வதைபோல கலாச்சாரம் தேவைப்படுகின்றது...... முயற்சிக்கு பாராட்டுகள்

CorTexT (Old) said...

கருத்துக்கு நன்றி!

இந்த மொழிபெயற்பில் நான் சந்தித்த சில சிக்கல்கள்...

ஆங்கிலத்தில் "துளியே", "கவியே" போன்ற விழித்தல் முறை இல்லை. அதற்கு "Oh" அல்லது "Hello" போன்றவற்றை பயன்படுத்தலாம் என்றாலும், அது முழுமையாக இல்லை. "இத்தனை", "எத்தனையாவது" போன்ற வார்த்தைகளுக்கு நேரடியான ஆங்கில வார்த்தைகள் இல்லை என்று நினைக்கின்றேன். "உனக்குள் தானே நான் இருந்தேன்" - இதிலுள்ள "தானே"-க்கு இணையாக ஆங்கில மொழிபெயற்புக்கு "Only" அல்லது "Always" போன்றவற்றை பயன்படுத்தலாம் என்றாலும், அது முழுமையாக இல்லை (I was only within you! அல்லது I was always within you!).

vmm said...

Every language has its own way of expression of feelings. To find the equivalent of one with the other specially for tamil to english, one has to go back to sackpheres time to get the exact one.

what i feel think is that over the period of time, people have forget to express the feelings in english, the reason being its not their mother tongue. Hence, the expression of feelings in english has been vanishing over a period of time. But then, the person in england or person having english as original mother tongue should be in a position to meet the demand.

by the way, I am always proud to say that my mother tongue is tamil and I am from India having rich culture and heritage. Is it not, kamaraj?

CorTexT (Old) said...

vmm, நல்ல கருத்துக்கள்! நீங்கள் கூறுவது போல் மொழி என்பது யார், எப்படி பயன்படுத்துகின்றார்கள் என்பதில் வளர்ச்சி அடைகின்றது. அப்படியே ஆங்கிலம் அறிவியலுக்கு ஏற்ற மொழியாகவும், தமிழ் உணர்வுகளுக்கு ஏற்ற மொழியாகவும் கருதப்படுகின்றது.

ஆங்கிலத்திலும் பல நல்ல புது கவிதைகளும் உண்டு. அவற்றை தமிழில் மொழிபெயற்பதும் எளிதல்ல. இது இருமொழி புலமை தேவைப்படுவதாலும், கலாச்சார வேறுபாடுகளாலும் கடினமாகின்றது.

தமிழை அறிவியலுக்கு முழுமையாக எடுத்து சென்றால் இன்னும் பெருமையாக இருக்கும்.