02 December 2008

கடவுள் உண்டு நிரூபணம்

மனிதன் இந்த உலகை பார்க்கிறான்... தாவரங்கள், விலங்குகள், பூமி, சூரியன், நட்சத்திரங்கள். அவற்றில் ஒருவகை வடிவமைப்பை பார்க்கிறான்... ஒருவகை படைப்பை பார்க்கிறான்... ஓருவகை ஒழுங்கை பார்க்கிறான். அவன் கேட்கிறான், யார் இதைப் படைத்தார்? இந்த தெரியாத ஒழுங்கை படைத்தவரை கடவுள் என்று குறிப்பிடுகின்றான். [ஒழுங்கு = கடவுள்]

மனிதன் சக மனிதன் நோய்வாய் படுவதையும், இறப்பதையும் பார்க்கிறான். அவனுக்கு ஏனென்றோ, யார் செய்தாரென்றோ தெரியவில்லை. மேலும் அவனை சுற்றி நடக்கும் பல விசயங்கள் அவனுக்கு புரியவில்லை. அதில் எந்த காரணமும், முறையும், ஒழுங்கும் அவனுக்கு தெரியவில்லை. எந்த காரணமும், முறையும் அற்று ஒழுங்கின்றி தோன்றினாலும், இதை யாரோ சில காரணங்களுக்காக செய்கிறார் என்று நினைக்கிறான். இந்த தெரியாத ஒழுங்கின்மைக்கு பின்னுள்ள காரணகர்த்தாவை கடவுள் என்று குறிப்பிடுகின்றான். [ஒழுங்கின்மை = கடவுள்]

மொத்தத்தில், அவனை வியப்பில் ஆழ்த்தும் ஒழுங்கு ஆகட்டும், அல்லது குழப்பமூட்டும் ஒழுங்கின்மை ஆகட்டும், அவனுக்கு தெரியாததை கடவுள் என்று குறிப்பிடுகின்றான். [தெரியாதது = கடவுள்]

பிறகு, சில தெரியாதவற்றுக்கு சில காரணங்களையும், முறையையும் கண்டறிகிறான். சில ஒழுங்கற்றவைகளுக்கு பின்னுள்ள ஒழுங்கை உணர்கிறான். எல்லா ஒழுங்கற்றவைகளுக்கு பின்னும் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். இப்பொழுது, ஒவ்வொரு ஒழுங்கற்றவைக்கு பின்னுள்ள ஒழுங்கை காண முயற்சிக்கின்றான். அப்படி, மேலும் மேலும் பல ஒழுங்கற்றவைகளுக்கு பின்னுள்ள ஒழுங்கை கண்டறிகிறான். ஆனால், ஒரு ஆழ்ந்த அடிப்படையான ஒழுங்கின்மையில் தடுமாறுகிறான். அந்த அடிப்படை ஒழுங்கின்மைக்கு பின்னுள்ள ஒழுங்கை கண்டறிய மேலும் மேலும் கடுமையாக முயற்சிக்கின்றான்.

இப்பொழுது மெதுவாக ஒரு பெரிய அடிப்படை இயற்கை விதியை உணர்கின்றான்: இயற்கை முழு-ஒழுங்கின்மையை (சமநிலை) நோக்கியே செல்லும். அதுவே இவ்வுலகின் முடிவாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு முழு-ஒழுங்கின்மையை நோக்கி செல்லும் போது, தற்காலிகமாக எப்படி சில ஒழுங்கு (அண்டம், நட்சத்திரங்கள், கோள்கள், உயிர், மனம் ஆகியவைகள்) உருவாக முடியும் என்பதையும் உணர்கின்றான். இவ்வாறாக, அவன் சில ஒழுங்கானவைகளுடன் (உறுதியான, நம்பகமான) மற்றும் ஒழுங்கின்மைகளுடன் (உறுதியற்ற, நம்பகமற்ற) வாழ்கின்றான். இது உண்மையாக இருந்தாலும், ஏன் இயற்கை இப்படி இருக்க வேண்டும் என்பது அவனுக்கு தெரியவில்லை. அவன் தன் தேடலை தொடர்கின்றான்.

எப்படியாகிலும், இவ்வுலகின் தொடக்கத்தின் மூலக்காரணத்தை நோக்கும் போது ஒரு ஆழ்ந்த புதிரை அவன் உணர்கின்றான். மேலும், அவனால் அதை முழுமையாக புரிந்து கொள்ள முடியுமா என்று வியக்கின்றான். எப்பொழுதும் போல், பலர் இந்த தெரியாததை கடவுள் என விரைந்து முடிவு எடுக்கின்றனர். ஆனால், ஒரு சிலர் மட்டும், கடவுள் என்பது அது விளக்கும் தெரியாததை விட மிகத் தெரியாதது என உணர்கின்றனர்.

கடைசியில், எப்படியாகிலும் [கடவுள் = தெரியாதது]. கடவுள் உண்டா? உண்டு; ஏனென்றால், தெரியாதது இன்னும் இருக்கிறது. ஆனால், கடவுள் என்பது நீ நினைப்பது அன்று; ஏனென்றால், அது தெரியாதது!

9 comments:

ஆ.ஞானசேகரன் said...

கடவுள்= கடம்+உள் அதாவது கடம் என்றால் மனம் உள் என்றால் உள்ளே என்பதன் பொருளில் கடவுள் என்றால் மனதின்னுள் என்ற பொருளையும் குறிக்கும்....

RajK said...

//
ஆ.ஞானசேகரன் கூறியது...
கடவுள்= கடம்+உள் அதாவது கடம் என்றால் மனம் உள் என்றால் உள்ளே என்பதன் பொருளில் கடவுள் என்றால் மனதின்னுள் என்ற பொருளையும் குறிக்கும்....
//

தகவலுக்கு நன்றி. நீங்கள் கூறுவது பெயர் காரணம். நான் பயன்படுத்திய சமன்பாட்டின் கோணம் உங்களுக்கு தெரிந்து இருக்கும்...அதில் கடவுள், இறைவன், ஆண்டவன், யகோவா என்று எப்படியும் அழைக்கலாம்.

இது இன்றைய அறிவியலின் ஒரு தத்துவப் பார்வை. இதில் string தியரி மற்றும் வெப்ப இயக்கவியலின் (thermodynamics) 2ம் விதியின் அக-வெப்பம் (Entropy) கோட்பாட்டின் விளைவுகள் அடக்கம். நான் எந்த அளவு தெளிவாக எழிதியுள்ளேன் என்று தெறியவில்லை. இயற்கையின் ஒழுங்கின்மை பற்றிய விவாதத்தில், ஒரு நண்பனுக்காக இதை ஆங்கிலத்தில் எழுதினேன். தழிலில் சரியாக வரவில்லை என்றே கருதுகின்றேன்.

தேவன் மாயம் said...

காலை வணக்கம்!நல்ல பதிவு!

RajK said...

//
thevanmayam கூறியது...
காலை வணக்கம்!நல்ல பதிவு!
//

வணக்கம். நன்றி!

Anonymous said...

அய்யா ஞானசேகரன் அவர்களே, கடவுள் என்றால் எல்லாவற்றிற்கு வெளியிலும் அதாவது "கடந்ததும்", எல்லவற்றிகு "உள்ளும்" என்று எங்கள் ஸ்கூல் வைத்தியர் எங்களுக்கு சொல்லி கொடுத்தார். அப்படியும் எடுத்து கொள்ளலாம் அல்லவா?

பிரியமுடன் பிரபு said...

நல்ல பதிவு
மறுபட்ட பார்வை

RajK said...

//பிரியமுடன் பிரபு கூறியது...
நல்ல பதிவு
மறுபட்ட பார்வை
//
நன்றி.

prince said...

வாவ் என்ன ஒரு ஆழமான பதிவு.
இது உங்கள் கருத்தோ, இல்லை படித்ததில் பிடித்ததோ தெரியாது ஆனால் உங்களது இந்த blog ரத்தினங்களின் கோர்வை.
விலை மதிப்பில்லாதது.
தொடருங்கள் வாழ்த்துக்கள்

CorTexT (Old) said...

//prince said...
வாவ் என்ன ஒரு ஆழமான பதிவு.
இது உங்கள் கருத்தோ, இல்லை படித்ததில் பிடித்ததோ தெரியாது ஆனால் உங்களது இந்த blog ரத்தினங்களின் கோர்வை.
விலை மதிப்பில்லாதது.
தொடருங்கள் வாழ்த்துக்கள்//

நன்றி!